புகார் பெட்டி சாலையில் சிதறியுள்ள ஜல்லி கற்களால் அச்சம்
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்கின்றன.இதனால், பல்வேறு பகுதிகளில் ஜல்லி கற்கள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன. இது, சக வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறாக உள்ளது.எனவே, இந்த ஜல்லி கற்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.அஜித்குமார்,சிங்கபெருமாள் கோவில்.