உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி பயனில்லாத பஸ் நிழற்குடை நல்லாமூரில் பயணியர் அதிருப்தி

புகார் பெட்டி பயனில்லாத பஸ் நிழற்குடை நல்லாமூரில் பயணியர் அதிருப்தி

சித்தாமூர் அடுத்த நல்லாமூர் கிராமத்தில், ரோட்டுக்கடை பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.நல்லாமூர், கொளத்துார், கோட்டிவாக்கம், பெருவெளி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சித்தாமூர், மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்துார் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.பல ஆண்டுகளாக இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இந்நிலையில் செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கத்தின் போது புதிதாக பேருந்து நிறுத்தத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில் நிழற்குடை அமைக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டு உள்ளதால், நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் விருப்பம் காட்டவில்லை.பேருந்துகளும் நிழற்குடையில் நின்று செல்வது இல்லை. இதனால் புதிய நிழற்குடை பயன்படுத்தப்படாமல் உள்ளது.எனவே, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் அமர இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.எனவே ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, நல்லாமூர் ரோட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை