புகார் பெட்டி சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?அச்சிறுபாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்துார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சமுதாய நலக்கூடம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, துாய்மை பாரத இயக்கத்தின் கீழ், 2022 -- 23ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், இந்த கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், கடமலைப்புத்துார் பேருந்து நிறுத்தம் அருகே இந்த கழிப்பறை கட்டடம் உள்ளதால், பேருந்து பயணியர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.- ராஜ செல்வகணேஷ், ஒரத்தி.