சென்னை: புகார் பெட்டி; குப்பை கிடங்கான சாலை டி.பி.சத்திரத்தில் அவலம்
அண்ணா நகர் மண்டலம், டி.பி.சத்திரம் பகுதியில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இதில், ஐந்தாவது தெருவில் உள்ள குடியிருப்புகளில் குப்பையை சேகரிக்க, சாலையோரத்தில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. தொட்டியில் தேங்கும் குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக கையாளுவது கிடையாது. இதனால், தொட்டியில் நிரம்பி வழிந்து, சாலை வரை தேங்கி கிடக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பல நாட்களாக கிடக்கும் கட்டடக்கழிவுகள், பழைய வீட்டு உபயோக பொருட்களால் கிடங்கு போல் மாறியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள், குப்பை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. குப்பையை உடனே அகற்ற வேண்டும். - நீலமேகம், அண்ணா நகர்.