புகார் பெட்டி:ஆலந்துார் மாரிசன் தெருவில் குப்பை குவியலால் சீர்கேடு
ஆலந்துார் மாரிசன் தெருவில் குப்பை குவியலால் சீர்கேடு
சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், 162வது வார்டில், மாரிசன் தெருக்கள் அமைந்துள்ளன. இதில், ஆறாவது தெரு இரண்டு வழித்தடங்களோடு மிகவும் குறுகலாக உள்ளது. இச்சாலையின் ஒரு தெருவில் குப்பை குவிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு வழியின்றி காணப்படுகிறது.தனி நபரால், பல மாதங்களாக சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பையால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தனி கவனம் செலுத்தி, மாரிசன் தெருவில் குவிந்துள்ள குப்பையை முழுமையாக அகற்றி, போக்குவரத்திற்கும், சுகாதாரத்திற்கும் வழிவகை செய்ய வேண்டும்.- சு.கணேசன், ஆலந்துார்.