புகார் பெட்டி : சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் சிங்கண்ண செட்டி தெரு உள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் இரு நாட்களாக வழிந்தோடி வருகிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சீரமைப்பதோடு, கழிவுநீர் தேங்கிய பகுதிகளில் கிருமிநாசினியை தெளிக்க வேண்டும்.- ரகுவரன், சிந்தாதிரிப்பேட்டை.