கொசு தொல்லை அதிகரிப்பு
தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், மாடம்பாக்கம் பகுதி, பேரூராட்சியாக இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதியில், சாலை, கால்வாய் என போதிய கட்டமைப்புகள் இல்லை. மற்றொரு புறம், கொசு மருந்தும் முறையாக அடிப்பதில்லை. இதனால், மாடம்பாக்கம் முழுதும் கொசு தொல்லை அதிகரித்து, மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு பெருகிவிட்டது. இதனால், முதியோர், குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் பரவி வருகின் றன. மாடம்பாக்கம் பகுதி யில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொசு மருந்து அடிக்க வேண்டும். - விஜயகுமார், மாடம்பாக்கம்.