உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி நுாலக நுழைவாயிலில் சாலையோர ஆக்கிரமிப்புகள்

புகார் பெட்டி நுாலக நுழைவாயிலில் சாலையோர ஆக்கிரமிப்புகள்

நுாலக நுழைவாயிலில் சாலையோர ஆக்கிரமிப்புகள்

மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், முழு நேர கிளை நுாலகம் இயங்கி வருகிறது. மூன்று தளங்கள் கொண்ட நுாலகத்தில், 72,000த்துக்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. அதிக போக்குவரத்து கொண்ட சண்முகம் சாலையில் நுாலகம் இயங்குவதால், தினசரி 500க்கும் அதிகமான வாசகர்கள் வந்து செல்கின்றனர்.இந்த நுாலக நுழைவாயிலை ஆக்கிரமித்து, சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், நுாலகத்திற்கு வருவோர், தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலர், வாகனத்தை நிறுத்த இடமில்லாததால் திரும்பி சென்று விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நுாலக நுழைவாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- வாசகர்கள், தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !