மேலும் செய்திகள்
ஆரோக்கியத்தை பாதிக்கும் திறந்தவெளி உணவுகள்!
04-Aug-2025
அந்தரத்தில் மின்கம்பம் பேரூர், செட்டிபாளையம் ஊராட்சி, 11வது வார்டு, குறிஞ்சி நகர், திருமகள் நகர் சந்திப்பில், உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் முற்றிலும் பெயர்ந்து, சிறிய பகுதி மட்டுமே ஒட்டிக்கொண்டுள்ளது. கம்பம் விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் நிகழ வாய்ப்புள்ளது. - சுப்பிரமணியன், பேரூர்.படையெடுக்கும் விஷப்பூச்சிகள் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள, ஆர்.வி.எல்.காலனி மேற்கு பகுதியில் உள்ள, ரிசர்வ் சைட்டில், சிலர் தொடர்ந்து குப்பையை கொட்டுகின்றனர். புதர் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் பாம்பு, தேள், பூரான் வருகிறது. - செந்தில்குமார், சிங்காநல்லுார்.தெருவிளக்கு பழுது கிழக்கு மண்டலம், சேரன்மாநகர், 22வது வார்டு, கம்பம் எண் 10ல், கடந்த 20 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் சரிசெய்யவில்லை. - ராஜேஷ்குமார், சேரன்மாநகர்.குழியால் விபத்து சிங்காநல்லுார் பேருந்து நிலையம் அருகே, காமராஜர் ரோட்டில் குழாய் பதிப்பு பணிகளுக்கு பின் சாலையை சீரமைக்கவில்லை. சாலை நடுவே அரை கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள குழியால், அடிக்கடி விபத்து நடக்கிறது. மூன்று மாதங்களுக்கு மேலாக புகார் செய்தும் நடவடிக்கையில்லை. - சரவணக்குமார், சிங்காநல்லுார்.வாய்க்கால் ஆக்கிரமிப்பு தாளியூர், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் வாய்க்கால் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதுடன், குப்பையையும் தொடர்ந்து சிலர் கொட்டிவருகின்றனர். கனமழை சமயங்களில் மழைநீர் செல்ல வழியில்லை. - கிரிஷ், தாளியூர்.தடுமாறும் வாகனஓட்டிகள் துடியலுாரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில், வெள்ளக்கிணறு பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே, குழாய் பதிப்பு பணிகளுக்காக குழியை தோண்டினர். பணி முடிந்த பின்னர் சாலையை சரியாக சீரமைக்கவில்லை. பைக்கில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். - ராஜா, துடியலுார்.இருளால் பாதுகாப்பில்லை செல்வபுரம், 77வது வார்டு, என்.எஸ்.கே. வீதியில், கம்பம் எண் 30ல் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியே செல்ல பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பணி முடிந்து வீட்டிற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. - வெங்கடேஷ், செல்வபுரம்.துரத்தும் நாய்கள் சுகுணா பிப்ஸ் பள்ளி அருகே, நேரு நகர் மேற்கில் தெருநாய்கள் பல சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோரை, துரத்திச் செல்கின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். - வித்யா, நேரு நகர்.பழுதான விளக்குகள் கோவை மாநகராட்சி, 40வது வார்டு, ஐயர் காலனி செல்லும் வழியில், தெருவிளக்கு பல நாட்களாக எரிவதில்லை. இரவு, 7:00 மணிக்கு மேல் வீதியில் நடக்கவே முடியவில்லை. கொள்ளை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பழுதான விளக்குகளை சரிசெய்ய வேண்டும். - விநாயகமூர்த்தி, ஐயர் காலனி.சிக்கனல் பழுது பாலக்காடு ரோடு, கோவைப்புதுார் பிரிவில் ஒருபக்க சிக்னல் வேலை செய்யவில்லை. கடந்த 3 வாரங்களாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். காலை, மாலை வேளையில் கல்லுாரி மாணவர்கள் சாலையை கடக்கவும் சிரமப்படுகின்றனர். தினமும் விபத்து நடக்கிறது. - சங்கர், கோவைப்புதுார்.
04-Aug-2025