குப்பைக்கு தீ வைப்பு; சுவாச பிரச்னையால் மக்கள் அவதி
ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி, நேரு காலனியில் பிரதான ரோட்டின் ஓரத்தில் பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பாம்பு இருந்ததால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையை விரைவாக அகற்றம் செய்ய வேண்டும். -- தண்டபாணி, பொள்ளாச்சி.ரோட்டில் ஜல்லிக்கற்கள் கிணத்துக்கடவு மயானம் செல்லும் வழித்தடத்தில், வளைவு பகுதியில் சேதமடைந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் ரோடு சீரமைப்பு பணிகள் நடக்காததால், இவ்வழியில் செல்பவர்கள் பலர் தடுமாறுகின்றனர். எனவே, இப்பகுதியை விரைவில் சீரமைக்க வேண்டும். - ஜான்சன், கிணத்துக்கடவு.குப்பை எரிப்பால் பாதிப்பு வடசித்தூர் -- நெகமம் ரோட்டில், கோப்பனூர்புதூர் பகுதியில் ரோட்டோரத்தில் அதிகளவு குப்பை கொட்டி எரிப்பதால், இந்த ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ரோட்டோரத்தில் குப்பை குவிப்பு எரிப்பதை தடுக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- அருண், நெகமம்.நிழற்கூரையில் போஸ்டர் கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பயணியர் நிழற்கூரையில் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்ந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே போஸ்டர்களை அகற்றம் செய்து நிழற்கூரைக்கு வண்ணம் பூச வேண்டும். - கண்ணன், கிணத்துக்கடவு.வடிகாலில் குப்பை உடுமலை யு.கே.சி., நகர் மழை நீர் வடிகாலில் குப்பைகள் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, வடிகாலில் உள்ள குப்பை, கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சாமிநாதன், உடுமலை.வாகனங்கள் ஆக்கிரமிப்பு உடுமலை, பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாப் வரை கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. - திருமூர்த்தி, உடுமலை.மதுக்கடையால் இடையூறு உடுமலை, பசுபதி வீதியில் உள்ள டாஸ்மாக் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மது அருந்திவிட்டு, பலரும் ரோட்டை மறித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கும் அச்சப்படுகின்றனர். - ரேவதி, உடுமலை.துார்வார வேண்டும் உடுமலை நகராட்சி ஸ்ரீ நகரில் கால்வாயில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால்,மழை காலத்தில் நீர் வெளியேறி ரோட்டில் தேங்குகிறது. எனவே, கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். - காமராஜ், உடுமலை.தெருநாய்கள் தொல்லை உடுமலை, ஜீவா நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. மாலை நேரங்களில் வீடுகளின் முன் கூடுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். குழந்தைகளை அழைத்து செல்வதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர். வீட்டின் முன்பு வைக்கப்படும் கழிவுகளை இழுத்துசென்று சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. - ஜெயந்தன், உடுமலை.இருளில் மூழ்கும் ரோடு உடுமலை,மலையாண்டிகவுண்டனுார் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் மாலை நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் தடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், இருள் சூழ்ந்திருப்பதால், பொதுமக்களுக்கு திருட்டு பயமும் ஏற்படுகிறது. - முருகன், மலையாண்டிகவுண்டனுார்.விபத்து அபாயம் பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில், புளியம்பட்டி அருகே ரோட்டோர மரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால், இரவு நேர வாகன ஓட்டுநர்கள் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, மரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- கருணாகரன், பொள்ளாச்சி.