ரோடுகளில் கால்நடைகள் உலா; போக்குவரத்துக்கு இடையூறு
பெயர் பலகை சேதம் பொள்ளாச்சி, ஆழியாறு செல்லும் ரோட்டில், அங்கலக்குறிச்சி அருகே ரோட்டோரம் ஊர்பெயர் பலகை சேதமடைந்து காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும். -- டேனியல், பொள்ளாச்சி.ரோட்டில் பள்ளம் பொள்ளாச்சி சத்திரம் வீதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியில் அதிகளவில் வாகன ஓட்டுநர்கள் பயணிப்பதால், பலர் இந்த குழியில் வாகனத்தை இயக்கி நிலை தடுமாறி செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும். - - ரகு, பொள்ளாச்சி.விபத்து அபாயம் பொள்ளாச்சி, சேரன் நகர் அருகே ரோட்டில் இருந்த வேகத்தடை சேதமடைந்ததால் அகற்றப்பட்டது. ஆனால் இதன் அருகே இருந்த வெள்ளை கோடுகள் அழிக்கப்படாமல் இருப்பதால் இந்த ரோட்டில் வரும் ஓட்டுநர்கள் இப்பகுதியில் வேகத்தடை உள்ளது என வாகன வேகத்தை குறைக்கும் போது விபத்து ஏற்படுகிறது. எனவே, இங்கு இருக்கும் வெள்ளை கோடுகளை அகற்ற வேண்டும். --- ராஜசேகர், பொள்ளாச்சி.குப்பையை அகற்றுங்க! கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோடு பின்புறம் உள்ள அங்கன்வாடி அருகே, ரோட்டோரம் குப்பை குவித்து எரிப்பதால் மாசு ஏற்படுகிறது. அங்கன்வாடி செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே, இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- மகேஷ், கிணத்துக்கடவு.மூடப்படாத கால்வாய் உடுமலை பைபாஸ் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூடப்படாமல் இருப்பதால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை மூட நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சக்திவேல், உடுமலை.போக்குவரத்திற்கு இடையூறு தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை -- பழநி ரோட்டில் வரிசையாக சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, இடையூறு வாகனங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன், உடுமலை.ரோட்டில் ஆக்கிரமிப்பு உடுமலை சீனிவாசா வீதியில் உள்ள கடைகளின் பொருட்கள் கடையின் முன்புறம் ரோட்டில் போடப்படுகின்றன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திக், உடுமலை.ரோட்டை சரிசெய்யுங்க உடுமலை - பழநி ரோட்டில், ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையின் ரோட்டில் பேட்ச் ஒர்க் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முத்துச்சாமி, உடுமலை.பார்க்கிங் வசதி வேண்டும் உடுமலை அருகே திருமூர்த்திமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்களும், பஸ்களும் வருகின்றன. ஆனால் வண்டிகள் நிறுத்த இடமில்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். - மல்லிகா, உடுமலை.ரவுண்டானா தேவை மடத்துக்குளம் நால் ரோட்டில், குமரலிங்கம், கணியூர், உடுமலை ரோடு, பழநி ரோடுகள் சந்திக்கின்றன. இதனால், அதிக அளவில் போக்குவரத்து இருந்து வருகிறது. எனவே, போக்குவரத்து பிரச்னையை சீர்செய்ய இங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ், உடுமலை.கால்நடைகளால் தொல்லை வால்பாறை நகரின் முக்கிய ரோடுகளில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் ரோட்டில் சுற்றுகின்றன. சில நேரத்தில் ரோட்டில் கால்நடைகள் நகராமல் படுத்துக்கொள்கின்றன. இதனால் இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- விமல் வால்பாறை.