விதிமீறி பிளக்ஸ் பேனர் அமைப்பு; மக்களுக்கு இடையூறு!
பிளக்ஸ்களால் இடையூறு வால்பாறை, அண்ணா சிலை அருகே விதிமுறைகளை மீறி ரோட்டோரத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. பிளக்ஸ் பேனர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - விமல், வால்பாறை.தண்ணீர் குழாய் சேதம் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் தனியார் கல்லூரி ஆர்ச் அருகே, அடிக்கடி ரோட்டோரம் குழாய் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, குழாயை சரி செய்து தர பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். - சபரிகுமார், கிணத்துக்கடவு.ரோடு சேதம் பொள்ளாச்சி, நியூஸ்கீம் ரோட்டில் இருந்து பல்லடம் ரோடு திரும்பும் இடத்தில் தொடர் வேகத்தடை அருகில், ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரோட்டை சீரமைக்க வேண்டும். - டேனியல், பொள்ளாச்சி.கால்வாயில் அடைப்பு பொள்ளாச்சி, ஐயப்பன் கோவில் ரோட்டில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால், ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும். - பெருமாள், பொள்ளாச்சி.ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா வழித்தடத்தில், ரோட்டின் ஓரத்தில் குப்பை கொட்டப்படுவதுடன், காலி மதுபாட்டிலும் சேர்ந்து குவிந்துள்ளன. குப்பையை அகற்ற நீண்ட நாட்களாகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். - மது, பொள்ளாச்சி.இருளில் காந்திநகர் உடுமலை, காந்திநகர் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதியில் மக்கள் வெளியில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும, இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருளாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். - சக்தி, உடுமலை.கட்டட கழிவுகள் உடுமலை பி.எஸ்.என்.எல். குடியிருப்பு அருகே கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டட கழிவுகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - சோமு, உடுமலை.பூங்காவை சீரமையுங்க! உடுமலை ஸ்ரீ நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. இப்பூங்கா பராமரிப்பு இல்லாமல் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், குழந்தைகள் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, பூங்காவை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மோகன், உடுமலை.கொசுத்தொல்லை உடுமலை, பழனியாண்டவர் நகர் சுரங்கபாதையில் பயன்படுத்த முடியாமல் கழிவுகள் நிறைந்துள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகளில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுகளை சுத்தம் செய்வதற்கும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜேந்திரன், உடுமலை.விதிமீறும் வாகனங்கள் உடுமலை, தாராபுரம் ரோடு சிவசக்தி காலனி அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. மாலை நேரங்களில் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. ரோட்டை கடப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. - பவானி, உடுமலை.பராமரிப்பு இல்லை உடுமலை, நேதாஜி மைதானத்தில் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் முறையில் இல்லாமல் மைதானத்தில் முள்செடிகள் அதிகமாக படர்ந்துள்ளது. குழந்தைகள் விளையாடும் இடங்களும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. - ராஜேஸ்வரி, உடுமலை.