மேலும் செய்திகள்
ஆரோக்கியத்தை பாதிக்கும் திறந்தவெளி உணவுகள்!
04-Aug-2025
குவிந்திருக்கும் கழிவுகள் ராமநாதபுரம், 64வது வார்டு, கணேசபுரம், சுப்பையன் வீதி, பங்கஜா மில் குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் மரக்கிளைகள், சோபா உள்ளிட்ட பழைய பொருட்களை போட்டு சென்றுள்ளனர். சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - ராஜூ, ராமநாதபுரம்.நாய் தொல்லை ரத்தினபுரி, 31வது வார்டு, சாதிக்பாட்ஷா வீதியில், நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வீதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக செல்கின்றன. நடந்து செல்பவர்களைநாய்கள் துரத்துகின்றன. சிறுவர்கள், முதியவர்கள் வீதிகளில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். - சுரேஷ், ரத்தினபுரி.மூடப்படாத குழிகள் உடையாம்பாளையம், 50வது வார்டு, வடக்கு விநாயகர் கோவில் வீதி ஒன்றில், 24 மணி நேர குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. மூன்றாவது சந்தில் பணிகளை அரைகுறையாக செய்ததுடன், தோண்டப்பட்ட குழிகளை சரியாகமூடாமல் விட்டுள்ளனர். - மனோகரன், உடையாம்பாளையம்.இடிந்த பால சுற்றுச்சுவர் உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ், பாலத்தின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இரவு நேரங்களில் பாலத்தின் ஓரத்தில் வரும் வாகனங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயமும்காணப்படுகிறது. - நந்தகுமார், உப்பிலிபாளையம்.போக்குவரத்திற்கு இடையூறு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 24வது வார்டு, தண்ணீர் பந்தல் ரோடு, வினோபாஜி நகருக்கு எதிரில் இருக்கும் குடியிருப்பு அருகே, மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.பத்து நாட்கள் ஆகியும்நடவடிக்கையில்லை. -பாலு, 24வது வார்டு.பஸ்கள் இயக்காததால் மக்கள் அவதி சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பஸ்கள் இயக்கப்படாததால், இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். - கார்த்திக், சுந்தராபுரம்.வளைந்த கம்பம் ராம்நகர், 67வது வார்டு, சாஸ்திரி ரோடு - பட்டேல் ரோடு சந்திப்பு பகுதியில், கடந்த ஓராண்டாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட கம்பம் சேதமடைந்து, வளைந்த நிலையில் உள்ளது. - ஸ்ரீநிவாசன், ராம்நகர்.சாக்கடை அடைப்பு வேலாண்டிபாளையம், சாஸ்திரி ரோடு, 44வது வார்டு, ஜானகி நகரில், சரிவர துார்வாராத சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் போது கழிவுநீருடன் கலந்து, வீடுகளுக்குள் வருகிறது. - ஜோசப், ஜானகி நகர்.சகதியான ரோடு வீரகேரளம், டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதி அமைத்து தரவில்லை. மண்ணாக இருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாகிறது. வாகனங்களின் சக்கரங்கள் மாட்டிக்கொள்கின்றன. சகதியான சாலையில் நடந்து செல்லவும் முடியவில்லை. - காயத்ரி, வீரகேரளம்.பார்க்கிங்கால் நெருக்கடி பீளமேடு, ஆரியபவன் ஓட்டல் எதிரே பாலத்திற்கு அடியில் வரிசையாக கார்கள் பார்க் செய்யப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. - துரை, பீளமேடு.போக்குவரத்து நெரிசல் பொள்ளாச்சி ரோடு, காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே 'யூ டர்ன்' பகுதியில் போக்குரவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்; தொடர் விபத்துகளும் நடக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்த வேண்டும். - சந்திரன், காந்தி நகர்.துார்வாராத சாக்கடை சிங்கநால்லுார் பேருந்து நிலையம் எதிரில், ஆர்.வி.எல்., மேற்கு காலனி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சாக்கடை துார்வாரவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. - செந்தில்குமார், சிங்காநல்லுார்.ஆமைவேகத்தில் சாலைப்பணி கவுண்டம்பாளையம், குப்பைகோணம்புதுார், அன்னை இந்திரா நகரில் சாலையில் திறந்த நிலையில் கழிவுநீர்செல்கிறது. கடந்த டிச., மாதம் துவங்கிய சாலைப்பணிகளையும் முடிக்கவில்லை. ஆக்கிரமிப்பால் சாலையை பயன்படுத்த முடியவில்லை. - பாலாஜி, கவுண்டம்பதாளையம்.
04-Aug-2025