உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / ரயில்வே கேட்டின் முன் வாகனங்கள் பார்க்கிங்; கேட் மூடும்போது நீண்ட வரிசையில் நீள்கிறது காத்திருப்பு

ரயில்வே கேட்டின் முன் வாகனங்கள் பார்க்கிங்; கேட் மூடும்போது நீண்ட வரிசையில் நீள்கிறது காத்திருப்பு

வீணாகும் குடிநீர்

வேடப்பட்டி, பேரூராட்சி அலுவலகம் அருகில், குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் சீரமைப்பிற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால், எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. சாலையில் வழிந்தோடும் தண்ணீரால், வாகனஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- பிரபு, வேடப்பட்டி.

தெருவிளக்கு பழுது

மதுக்கரை மெயின் ரோடு, 97வது வார்டு, மோகன் நகர், ரத்தினம் கார்டன் அருகே பாலத்தில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. தினமும் இப்பகுதியில் விபத்து நடக்கிறது. - சரவணன், மதுக்கரை.

விதிகளை மீறி பார்க்கிங்

மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து சங்கனுார் செல்லும் சாலையில் ரயில்வே கேட்டுக்கு முன்னால் வரை, சாலையின் இருபுறமும் கார்கள், லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. ரயில்வே கேட் மூடப்படும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- சுப்ரமணியன், சங்கனுார்.

சாலையெங்கும் குழிகள்: மக்கள் அவதி

உப்பிலிபாளையம், 60வது வார்டு, பிருந்தாவன் காலனியில், சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் மேற்கொள்ளவில்லை. சாலையெங்கும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது.- கோபாலன், உப்பிலிபாளையம்.

நாறும் பூங்கா

குனியமுத்துார், சக்தி நகர் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். இதனால், பூங்காவை சுற்றிலும் கடும் துர்நாற்றமும், சுகாதாரமற்ற சூழலும் நிலவுகிறது. தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.- கணேஷ், குனியமுத்துார்.

இருளால் எகிறும் அச்சம்

பீளமேடு, 24வது வார்டு, கவுதமபுரி நகர், பேஸ் - 2 பகுதியில் 'எஸ்.பி -75, பி - 35' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.- கிருஷ்ணகுமார், பீளமேடு.

ஆக்கிரமிப்பால் அவதி

பீளமேடு, 27வது வார்டு, பாரதியார் காலனி ரோட்டில், தனியார் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையை ஆக்கிரமித்து, கம்பி வேலை பணிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, சாலையில் பணி நடந்து வருவதால் குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர்.- ஜெகதீபா, பீளமேடு.

நல்லநேரம் வரவில்லை

துடியலுார், வி.கே.எல்., நகர், ஆரஞ்ச் கிரஸ்ட் அபார்ட்மென்ட் அருகே பெரிய மரத்தின் கிளைகள் ஒடிந்து சாலையில் விழுந்துள்ளது. நான்கு நாட்களுக்கு மேலாக சாலையில் கிளைகள் கிடக்கின்றன. அவ்வழியே வாகனங்களில் செல்ல முடியவில்லை. கிளைகளை வெட்டி பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- வேலுசாமி, துடியலுார்.

மூடப்படாத குழி

கோவை மாநகராட்சி, 66வது வார்டு, அம்மன்குளம் வடக்கு பகுதியில், பண்ணாரி அம்மன் கோவில் அருகில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாய் சீரமைப்பிற்காக குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்பும் குழியை மூடவில்லை. வெறும் தடுப்பு மட்டும் வைக்கப்பட்டுள்ளதால், வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.- ரூபேஷ், அம்மன்குளம்.

குடிநீரின்றி தவிப்பு

மாநகராட்சி, தெற்கு மண்டலம், 94வது வார்டுக்கு உட்பட்ட, மாச்சம்பாளையம், பால்கார குட்டியப்பக்கோனார் வீதியில், மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிலசமயம், 20 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் விநியோகிப்பதில்லை. போதிய குடிநீரின்றி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.- ரமேஷ், மாச்சம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை