ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம்; விபத்துக்கு அச்சாரம்
போக்குவரத்து நெரிசல் உடுமலை கச்சேரி வீதியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறு சிறு விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திக், உடுமலை.நடைபாதை சேதம் உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ரோட்டோரம் முழுவதும் நடைபாதை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தாமல், ரோட்டை ஆக்கிரமித்து ஓட்டுநர்கள் நிறுத்துகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதுடன், நடைபாதையிலும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். - ஜனனி, உடுமலை.வேகத்தடை வேண்டும் உடுமலை கல்பனா ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. நால்ரோட்டிலிருந்து வரும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகனங்கள் அதிவேகத்துடன் வருவதால் பொதுமக்கள் நடந்துசெல்வதற்கும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டியதும் அவசியமாகிறது. - பாலதண்டாணி, உடுமலை.நிழற்கூரை இல்லை உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில், பழநி மார்க்கமாக செல்லும் இடத்தில், பொதுமக்கள் காத்திருப்பதற்கு நிழற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், பஸ்சுக்காக பயணியர் வெயில், மழையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன், உடுமலை.தெருநாய்கள் தொல்லை கணக்கம்பாளையம் ஜீவா நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. காலை, மாலையில் தெருவில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் துரத்துகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் ரோட்டில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். - மணிமேகலை, உடுமலை.சுகாதாரம் பாதிப்பு உடுமலை, பசுபதி வீதி நால்ரோட்டில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. தெருநாய்கள் கழிவுகளை இழுத்துவந்து ரோட்டில் பரப்புகின்றன. மிகுதியான துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் முகம் சுழிக்கின்றனர். - சீனிவாசன், உடுமலை.பகலில் எரியும் மின்விளக்கு பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் பகல் நேரத்தில் எரிகின்றன. இதனால், மின்சாரம் வீணாகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதை கவனித்து சரி செய்ய வேண்டும். -- ஆறுச்சாமி, கோவில்பாளையம்.கால்வாய் வசதியில்லை! வால்பாறை நகரில், ஆங்காங்கே சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இன்னல்கள் ஏற்படுவதுடன், வாகனம் ஓட்டவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -- விவேக், வால்பாறை.ரோட்டோரத்தில் குப்பை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் பலருக்கு துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இத்துடன் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டோர குப்பையை அகற்றம் செய்ய வேண்டும். -- காளீஸ்வரன், நெகமம்.மின்கம்பத்தால் இடையூறு கிணத்துக்கடவு, பெரியார் நகரில் ரோட்டோரம் பழைய மின்கம்பம் அகற்றம் செய்யாமல் குப்பை போன்று கால்வாய் அருகே போடப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். -- மோகன், கிணத்துக்கடவு.ரோடு சேதம் பொள்ளாச்சி -- அம்பராம்பாளையம் ரோடு ஆற்று பகுதி அருகே வளைவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும். -- உசேன், பொள்ளாச்சி.