மேலும் செய்திகள்
பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதம்
06-Feb-2025
முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் போலீஸ் வீதி - கடலுார் சாலை சந்திப்பில் வாய்க்கால் அடைத்து கடை கட்டி விட்டதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. ராஜன், புதுச்சேரி. சந்தை புதுக்குப்பம், துர்கா கோவில் சாலையில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.ஜெயராஜ், சந்தை புதுக்குப்பம். கொசு தொல்லை
அரும்பார்த்தபுரம் நடுத்தெருவில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகமாகி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஜெயராஜ், அரும்பார்த்தபுரம்.தேங்காய்த்திட்டு நேரு நகர் பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் துாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாண்டியன், தேங்காய்த்திட்டு. நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை சாலையில் தெரு நாய்கள் சுற்றிதிரிவதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. சுந்தர், முதலியார்பேட்டை. நடைபாதை சேதம்
ஆரியப்பாளையம் புதிய ஆற்று பாலத்தின் நடைபாதை வடமங்கலம் பக்கம் சேதமடைந்து கிடக்கிறது.முத்து, வடமங்கலம். திறக்காத சப்வே
நுாறடிச்சாலை ரயில்வே மேம்பால, சப்வே பணி முடிந்து திறக்கப்படாமல் கிடக்கிறது. சந்தோஷ், புதுச்சேரி. வாகனங்களால் தொல்லை
புதுச்சேரி சுப்பையா சாலை ரயில் நிலையம் அருகிலும், உப்பளம் அம்பேத்கர் சாலை கல்லறை அருகிலும் வரிசையாக 50க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தமிழரசி, உப்பளம்.
06-Feb-2025