புகார் பெட்டி..
நெற்பயிர்கள் பாதிப்புசிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் ஆத்துமேடு அருகே நெற்பயிர் வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.வேல்முருகன், புதுச்சத்திரம்.சாலை வசதி தேவைவிருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு பின்புறம் உள்ள ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் சாலை வசதியின்றி பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.கண்ணபிரான், பெரியார் நகர்.தொற்று நோய் அபாயம்விருத்தாசலம் மேட்டுக்காலனியில் சுகாதார வளாகம் இல்லாமல் திறந்த வெளியில் உபாதைகளை கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.விஜயா, விருத்தாசலம்.