உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் /  புகார் பெட்டி: கடலூர்

 புகார் பெட்டி: கடலூர்

வாகன ஓட்டிகள் அச்சம் பரங்கிப்பேட்டை, ரயில்வே கேட்டில் இருந்து பு.முட்லுார் வரை, நெடுஞ்சாலையில் மின்சார வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். -கார்த்தி, பு.முட்லுார். போக்குவரத்து பாதிப்பு விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பில் தினசரி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரவணன், விருத்தாசலம். காத்திருப்பு கூடம் சீரமைக்கப்படுமா? விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலா, விருத்தாசலம். ஆக்கிரமிப்பால் பயணிகள் சிரமம் வேப்பூர் கூட்டுரோடு மேம்பாலத்தின் கீழேயும், பஸ் நிறுத்தத்திலும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் சிரமமடைகின்றனர். -அவினாஷ், வேப்பூர். சேதமடைந்த சாலைகள் வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் தெருக்கள் தோறும் சிமெண்ட் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. -லட்சுமணன், ஐவதுகுடி. சாலைகளில் மணல் குவியல் வேப்பூர் சர்வீஸ் சாலைகளில் புழுதி மணல் குவிந்து கிடப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். -பிரபு, வேப்பூர். விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரையில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. - கணேஷ்குமார், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !