புகார் பெட்டி கடலுார்
புறநகர் பஸ் நிறுத்தப்படுமா? விருத்தாசலம் - தொழுதுார் நெடுஞ்சாலையில், பெண்ணாடம், முருகன் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் புறநகர் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுரேஷ், அகரம்.குடிநீர் பைப் உடைப்பு பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமம் வழியாக செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாகிறது.ராமு, பரங்கிப்பேட்டை. மக்கள் அச்சம் பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் சமூக விரோதிகள் மது அருந்துவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பிரபு, பண்ருட்டி. எச்சரிக்கை பலகை தேவை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணி நடப்பதால், விபத்துகளை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.ஆனந்தகுமார், மணவாளநல்லுார்.