மேலும் செய்திகள்
தரைப்பாலம் நடுவில் உருவான பள்ளத்தால் விபரீதம்
13-Aug-2025
சேதமான நடைமேடை திண்டுக்கல் - திருச்சி ரோடு அரசு மருத்துவமனை அருகே நடைமேடை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் உள்ளது .பாதசாரிகள் நடந்த செல்ல சிரமப்படுவதால் நடைமேடையை சரிசெய்ய வேண்டும். ரஞ்சித்குமார், திண்டுக்கல்.......-------பட்டு போன மரத்தால் விபத்து திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு பாலகிருஷ்ணாபுரம் அருகே பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரங்கள் அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்ற பட்டமரத்தை அகற்ற வேண்டும் .குமார், திண்டுக்கல். ........------- சிதறிக்கிடக்கும் குப்பை திண்டுக்கல் - திருச்சி ரோடு இ.பி. காலனி அருகே குப்பை அள்ளப்படாமல் சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையை கால்நடை மேய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது .குப்பையை அகற்ற வேண்டும்.பாண்டியன், திண்டுக்கல். ........-------சாக்கடையில் கழிவு நீர் தேக்கம் காணப்பாடி ராமநாதபுரத்தில் சாக்கடை கட்டமைப்பில் மண் சேர்ந்து மூடி கிடப்பதால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது . இதோடு அப்பகுதியில் தொற்று நோய் பரவலுக்கும் வழிவகுக்கிறது. இதை துார் வார வேண்டும். -- கண்ணன், வடமதுரை. ........--------சாயும் நிலையில் மின் கம்பம் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி தெற்குதெருவில் மின் கம்பத்தின் பூச்சுகள் பெயர்ந்து கான்கிரிட் கம்பிகள் வெளியே தெரிகிறது. காற்று அடிக்கும்போது மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து முன் மாற்ற வேண்டும் க.ரதிஷ் பாண்டியன் ,- பொம்மணம்பட்டி. .......--------ரோடை ஆக்கிரமித்து சந்தை கோபால்பட்டியில் சனிக்கிழமை ஆடு,கோழி சந்தை ரோட்டை ஆக்கிரமித்து நடக்கிறது .பலநுாறு பேர் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நடக்க வாய்ப்புள்ளது. வார சந்தையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனபால், வீரசின்னம்பட்டி. ...........---------ரோட்டில் ஓடும் கழிவு நீர் பழநி பாலசமுத்திரம் பைபாஸ் ரோடு அருகே ராமநாதநகரில் நீண்ட காலமாக சாக்கடை அடைத்து கழிவு நீர் ரோட்டில் செல்கிறது .இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜின்னா, பழநி. ........----------
13-Aug-2025