உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / ஈரோடு / எஸ்.பி., ஆபீஸில் புகார் பெட்டி

எஸ்.பி., ஆபீஸில் புகார் பெட்டி

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், பொதுமக்கள் மனுக்களை அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்-டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், பொதுமக்களின் புகார்களை அதிகாரிகள் நேரடியாக பெற வாய்ப்பு இல்லை. மாறாக பெட்டியில், தங்கள் புகார்களை மனு-வாக எழுதி மக்கள் போட்டு செல்ல வேண்டும். அந்த மனுக்கள் மீது, போலீஸ் துறை சார்பில் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்-கப்படும். இதன்படி நேற்று காலை, எஸ்.பி., அலுவலகம் முன்-புறம் புகார் பெட்டி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் புகார்-களை பெட்டியில் போட்டு சென்றனர். தேர்தல் பணிகள் (பிப்., 10) நிறைவு பெறும் வரை, புகார் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை