உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

சின்னேசலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் பாசன வாயக்காலை தனி நபர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.-முரளி, பங்காரம்.

பஸ் வசதியின்றி அவதி

உளுந்துார்பேட்டை - கிளியூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-உதயகுமார், ரகுநாதபுரம்.

நெடுஞ்சாலையோரம் குப்பைகள்

எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.-திருமால், எலவனாசூர்கோட்டை.

சாலை விரிவாக்கம்: விபத்து அபாயம்

மூங்கில்துறைப்பட்டில் சாலை விரிவாக்க பணி முழுமையாக முடியாதாதல் விபத்துகள் அதிகரித்து வருகிறது.-ராஜா, மூங்கில்துறைப்பட்டு.

குண்டும் குழியுமான சாலை

ஆற்கவாடி - ஈருடையாம்பட்டு சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-ராஜா, ஆற்கவாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !