உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மின் திருட்டு

அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கோவில் விழா, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மின் கம்பங்களில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுகிறது.-சக்திவேல், அணைக்கரைகோட்டாலம்.

கோமுகி அணை துார் வாரப்படுமா?

கோமுகி அணை முழுமையாக துார்வாரி நீர் சேகரிப்பை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், கள்ளக்குறிச்சி.

நுாலகம் கட்டப்படுமா?

கள்ளக்குறிச்சி நுாலகத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ள பழைய தாலுகா அலுவலக பகுதி, நுாலக கட்டட பணிகள் எதுவும் துவக்கப்படாமலேயே இருப்பதால் தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.-கோகுல்தாஸ், கள்ளக்குறிச்சி.

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.-ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை