உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குப்பை எரிப்பால் பாதிப்பு

உளுந்துார்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே குப்பை மேடுகள் தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.-சிவராமன், உளுந்துார்பேட்டை.

சாலையோர குப்பையால் துர்நாற்றம்

கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

உலர்களமான தேசிய நெடுஞ்சாலை

கள்ளக்குறிச்சி தச்சூர் பகுதியில் பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நிற்கும் சாலை பகுதியில் விவசாய விளைபொருட்கள் கொட்டி காயவைக்கும் உலர் களமாக மாறிப்போனது.--ராஜன், தச்சூர்.

சாலை, மின் விளக்கு வசதியில்லை

கள்ளக்குறிச்சி காமதேனு நகர் பகுதியில் சாலை மற்றும் தெருமின் விளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.-சரண், கள்ளக்குறிச்சி.

பயணிகள் நிழற்குடை தேவை

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாதாதல் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.-அழகுராஜா, கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை