புகார் பெட்டி
சாலையில் மண் குவியல் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பஸ் ஸ்டாப் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண் குவியல்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாந்த், தச்சூர். - குடிநீர் பைப் லைன் சேதம் சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தில் குடிநீர் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமன், செல்லியம்பாளையம். நிழற்குடை தேவை கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திவாகரன், ரோடுமாமந்துார். திறந்து கிடக்கும் கிணறு சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணற்றில் பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும். பீட்டர், மேல்நாரியப்பனுார்.