மேலும் செய்திகள்
புகார் பெட்டி
06-Aug-2025
பொது இடங்களில் மது அருந்தும் அவலம் திருக்கோவிலுாரில் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை வளாகம், தரைப்பாலம், பள்ளி வளாகம், பொதுப்பணித்துறை மற்றும் தாலுகா அலுவலக வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் நள்ளிரவு வரை மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி. பாலத்தில் குப்பை சின்னசேலம் அடுத்த இந்திலி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஓடை பாலத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. -சிவராமன், இந்திலி. சுகாதார வளாகம் கட்டப்படுமா கள்ளக்குறிச்சி அடுத்த குருநாதபுரத்தில் பொது சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலு, குருநாதபுரம். பயணிகள் நிழற்குடை தேவை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகுராஜா, கள்ளக்குறிச்சி.
06-Aug-2025