புகார் பெட்டி
பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் கடைகள் கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் மற்றும் பஸ்கள் வெளியே வரும் வழிகளில் நடைபாதை வியாபாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. --பிரேம், கள்ளக்குறிச்சி. பள்ளி எதிரில் வேகத்தடை தேவை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு கச்சிராயபாளையம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். -பிரேமானந்தன், கள்ளக்குறிச்சி. ஏ.டி.எம்., மையத்தில் எரியாத மின்விளக்கு கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் மின்விளக்கு எரியவில்லை. -சந்தோஷ்குமார், கள்ளக்குறிச்சி.