புகார் பெட்டி..
ஆற்றில் இறைச்சி கழிவுகள் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் கோழி, ஆடு, மாடு இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும். -முருகன், மூங்கில்துறைப்பட்டு. கால்வாய் துார்வார வேண்டும் மூங்கில்துறைப்பட்டிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள கிளை கால்வாய்களை துார் வார நடவடிக்கை வேண்டும். -மணிகண்டன், மூங்கில்துறைப்பட்டு. தாறுமாறான வாகனங்கள் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது. - பிரேமானந்தம், கள்ளக்குறிச்சி. வாய்க்கால் சீரமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. -பிரேம், கள்ளக்குறிச்சி.