உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி : திசைமாறிய அறிவிப்பு பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

புகார் பெட்டி : திசைமாறிய அறிவிப்பு பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

சென்னை --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலைகள் சந்திக்கும், ஸ்ரீபெரும்புதுார் மேல்நிலைப் பள்ளி சந்திப்பு உள்ளது.சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே வரும் வாகனங்கள், குன்றத்துார் செல்ல, மேல்நிலைப் பள்ளி சந்திப்பில் இடது புறம் திரும்பி செல்ல வேண்டும்.இந்த நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி அறிவிப்பு பலகை, திசைமாறி வந்த வழியிலயே பின்னோக்கி செல்ல வேண்டும் என, காட்டுவதால், குன்றத்துார் செல்லும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதுார் உயர்நிலைப் பள்ளி சந்திப்பில் குழப்பம் அடைந்து, தவறான பாதையில் செல்கின்றனர்.எனவே, அச் சந்திப்பில் சரியான அறிப்பு பலகையை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.- க. மூர்த்தி,ஸ்ரீபெரும்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி