உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

ஒரகடம் சாலையில் உடைந்த மின் விளக்கை சரி செய்ய வேண்டும் ஒ ரகடம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சிப்காட் சாலை சந்திப்பு வழியே, வைப்பூர், எறையூர் கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர். இந்த பகுதிகளில் இயங்கிவரும் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை கனரக வாகனங்கள் இந்த சந்திப்பு வழியே செல்கின்றன. இந்நிலையில், முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ள இங்கு, இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், சாலையை கடக்கும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் மூலம், இந்த சந்திப்பில் மின் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது, மின் கம்பத்தில் உள்ள மின்விளக்கு உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால், இரவு நேரங்களில் சாலையை கடக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை சந்திப்பில் சேதமான மின்விளக்கை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - த.இளையராஜா, எறையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை