காஞ்சி புகார் பெட்டி: பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், வேடல் கிராமம் அமைந்துள்ளது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில், வேடல் என எழுதப்பட்ட பெயர் பலகை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சாலையோரம் உள்ள வேப்ப மரத்தின் கிளை, வேடல் கிராம பெயர் பலகையை மறைக்கும் வகையில் உள்ளது. இதனால், வேடல் கிராமத்திற்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, வேடல் கிராம பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கருணாகரன், காஞ்சிபுரம்.