உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பாதாள சாக்கடை மூடியை மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பாதாள சாக்கடை மூடியை மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காஞ்சியில் மூடப்படாமல் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் கா ஞ்சிபுரம் வைகுண்டபுரம் விரிவாக்கம் பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையின் தரை மட்டத்தில் உள்ள வடிகால்வாய் மூடி இல்லாமல் திறந்து கிடக்கின்றன. அதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளும், ஆடு, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளும் மூடப்படாமல் இருக்கும் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியை கான்கிரீட் சிலாப் மூலம் மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஏ.ஹரிஹரன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ