/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குடிநீர் தொட்டி அருகில் குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குடிநீர் தொட்டி அருகில் குப்பையால் சுகாதார சீர்கேடு
குடிநீர் தொட்டி அருகில் குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு உடையார் தெருவில், அப்பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க முறையாக வராததால், அப்பகுதி மக்கள் குடிநீர் தொட்டி அருகில் குப்பையை கொட்டி வருகின்றனர். காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குடிநீர் தொட்டி அருகில் குப்பையை அகற்றவும், அங்கு குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கவும், துாய்மை பணியாளர்கள் இப்பகுதியில் தினமும் வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பி.கண்ணன், காஞ்சிபுரம்.