/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வடிகால்வாயில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வடிகால்வாயில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
வடிகால்வாயில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, திருமங்கையாழ்வார் சாலையில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சாலையோரம் உள்ள வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி உள்ளது.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. சுகாதார சீர்கேடு நிலவுவதால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.எனவே, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள், வடிகால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா. சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதுார்.