உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; செடிகளால் துார்ந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க வேண்டும்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; செடிகளால் துார்ந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க வேண்டும்

செடிகளால் துார்ந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க வேண்டும்

கா ஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்து அடையாளமே தெரியாமல் உள்ளது. இதனால், மழை பெய்தால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியை சூழும் நிலை உள்ளது. எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் புத்தேரியில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ஜனார்த்தனன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !