காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமான நடைபாதை தளம் சீரமைக்க கோரிக்கை
சேதமான நடைபாதை தளம் சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், வைகுண்ட பெருமாள் தெரு சந்திப்பில், நடைபாதை அமைந்துள்ள வடிகால்வாய் தளத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதன் மீது மரப்பலகையால் மூடப்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள், கவன குறைவாக இப்பகுதியை கடக்கும்போது நிலை தடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் நடைபாதை தளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே. ரஜினிகாந்த், காஞ்சிபுரம்.