உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இருக்கையை சீரமைக்க வேண்டும்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இருக்கையை சீரமைக்க வேண்டும்

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இருக்கையை சீரமைக்க வேண்டும்

உ த்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு, சுற்றுவட்டார கிராமத்தினர் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு, வரும் பயணியர் அமர பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. த ற்போது, இருக்கைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. அதில், தெற்கு நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கை ஒன்று சேதமடைந்து சாய்ந்து உள்ளது. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர் இருக்கையில் அமர முடியாமல், நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் சேத மடைந்துள்ள இருக்கையை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம். ராஜேந்திரன், உத்திரமேரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி