/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?
மின் கம்பியை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் அகற்றப்படுமா?
உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில், மல்லியங்கரணை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் வாரியத்தின் வாயிலாக குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள பகுதியில் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மின்கம்பங்களின் அருகே மரக்கிளைகள் வளர்ந்து, மின் கம்பிகளை சூழ்ந்து உள்ளது.இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், மழை நேரங்களில் மின்சாரமானது மரக்கிளைகளின் வழியே பாய்வதால், அப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.