காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
குப்பை தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. ஊரக வளர்ச்சி துறை சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளுக்கு முன், 10க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலான குப்பை தொட்டிகள் பயன்பாடின்றி, ஊராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வசிப்போர், வேறுவழியின்றி திறந்தவெளியில் குப்பை கொட்டி வருவதால், சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பை பரவி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்பை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். - மா. புஷ்பராஜ், திருமங்கலம்.