மேலும் செய்திகள்
காஞ்சி புகார் பெட்டி பகுதி
04-Dec-2025
கடந்த மாதம், வடகிழக்கு பருவமழை பெய்தபோது, காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், மோட்டார் மூலம் மின்நகரில் தேங்கிய மழைநீர் திருக்காலிமேடு பிரதான சாலை வழியாக மஞ்சள் நீர் கால்வாயில் வெளியேற்றப்பட்டது. சாலையில் சென்ற மழைநீரில், திருக்காலிமேடு சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.குப்புசாமி, காஞ்சிபுரம்.
04-Dec-2025