மேலும் செய்திகள்
வடமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
31-Aug-2025
திருத்தணி நகராட்சி மேல்திருத்தணி குடோன் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இத்தெருவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. குடோன் தெருவில், 12 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை முறையாக பராமரிக்கவில்லை. மேலும், இவ்வழியாக நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு, அதிக பாரங்களுடன் லாரிகள் செல்வதால் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த கான்கிரீட் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதிக சுமை ஏற்றி வரும் லாரிகளை குடோன் தெருவில் அனுமதிக்காமல், மாற்றுப்பாதையில் அனுமதிக்க வேண்டும். - து.யுவராஜ், திருத்தணி.
31-Aug-2025