உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் /  குப்பை எரிப்பதால் சுவாச கோளாறு

 குப்பை எரிப்பதால் சுவாச கோளாறு

தி ருத்தணி பழைய தர்மராஜா கோவில் அருகே, துாய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. மேலும், சிலர் இறைச்சி கழிவுகளை கோவில் அருகே கொட்டுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இக்கோவில் அருகே வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் சார் - கருவூலக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, குப்பைகள் எரிப்பதால் சுவாச கோளாறும், இறைச்சி கழிவுகளால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.குமரவேல், திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை