திருவள்ளூர்: புகார் பெட்டி; குப்பைக் குவியலால் சுகாதார சீர்கேடு
குப்பைக் குவியலால் சுகாதார சீர்கேடு
திருமழிசை 'சிப்காட்' தொழிற்பேட்டையில், 20க்கும் மேற்பட்ட தெருக்களில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், ஏழாவது பிரதான சாலையில் தொழிற்சாலைகளில் சேகரிக்கும் குப்பையை கொட்டி வருகின்றனர்.இதனால், அருகில் உள்ள குளம் மாசுபடுகிறது. மலைபோல் குவியும் குப்பையால், விஷ பூச்சி உருவாகின்றன. துர்நாற்றமும் வீசுவதால், தொழிற்சாலை ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.'சிட்கோ' நிர்வாகம் தேங்கிய குப்பையை அகற்றி, தொடர்ந்து அந்த இடத்தில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோதை ஜெயராமன்,வரதராஜபுரம்.