திருவள்ளூர்: புகார் பெட்டி; பள்ளிகள் அருகில் வேகத்தடை வேண்டும்
பள்ளிகள் அருகில் வேகத்தடை வேண்டும்
பொதட்டூர்பேட்டை தோப்பு தெரு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.பள்ளிக்கூடம் அமைந்துள்ள தோப்பு தெருவில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, துவக்கப் பள்ளிகள் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- எஸ்.செல்வராஜ்,பொதட்டூர்பேட்டை.