திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலையில் மழைநீர், குப்பை தேக்கம்
சாலையில் மழைநீர், குப்பை தேக்கம்
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளயைம் சாஸ்திரி தெருவில், கருமாரியம்மன் கோவில் அருகே, மரக்கிளைகள், இலைகள் என குப்பை குவிந்து கிடக்கிறது. தற்போது அங்கு மழைநீரும் தேங்கி இருப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கும், சுகாதார பாதிப்புகளுக்கும் உள்ளாகி உள்ளனர். மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - ஆர்.ஜி. கிருஷ்ணா, பொன்னேரி.