உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / பராமரிப்பு இல்லாத பயணியர் நிழற்குடை

பராமரிப்பு இல்லாத பயணியர் நிழற்குடை

சோழவரம் அடுத்த காரனோடை – சீமாவரம் வழித்தடத்தில், நெற்குன்றம் கிராமத்தில் உள்ள பேருந்து நிழற்குடை பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இருக்கைகள் சேதம் அடைந்தும், இரும்பு தளவாடங்கள் துருப்பிடித்து ஓட்டை உடைசல்களுடனும் உள்ளன. இந்த வழித்தடத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர், பராமரிப்பு இல்லாத நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இந்த நிழற்குடையை புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – எம்.முரளி, சோழவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை