உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / சேதமடைந்த மின் கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

சேதமடைந்த மின் கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை, 7வது குறுக்கு தெருவில் உள்ள மின் கம்பம், சேதமடைந்து உள்ளது. இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளதால், மின் கம்பம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனால், அந்த தெருவில் உள்ள ஆறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் புகார் செய்த போது, மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், இதுவரை அந்த மின் கம்பம் அகற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் தலையிட்டு, பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய கம்பம் அமைக்க வேண்டும். – ந.கோதை ஜெயராமன், வரதராஜபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !