உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / இருள் நிறைகிறது; அச்சம் சூழ்கிறது

இருள் நிறைகிறது; அச்சம் சூழ்கிறது

ஒளிராத விளக்கு பெருமாநல்லுார், பொடாரம்பாளையம், மகாபுரி கார்டனில் கடந்த 20 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. மக்கள் இரவில் நடமாட சிரமப்படுகின்றனர். - குமார், பெருமாநல்லுார். மில்லர் பஸ் ஸ்டாப்பில் இருந்து புஷ்பா சந்திப்பு வரை இரவில் தெருவிளக்கு எரியவில்லை. - ராஜா, பெருமாநல்லுார். ரோடு படுமோசம் லட்சுமி நகர் சூர்யா வீதி ரோடு குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது. தார் ரோடு அமைத்து தர வேண்டும். - திலீப், லட்சுமி நகர். வீணாகும் குடிநீர் அவிநாசி, மெயின் ரோடு, கருணாம்பிகை ஹார்டுவேர்ஸ் எதிரில் கடந்த ஒரு வாரமாக குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. - பொன்னுசாமி, அவிநாசி. திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பயணிகள் வசதிக்காக நிழற்கூரை அமைக்க வேண்டும். - செல்வராஜ், மீனாம்பாறை கால்வாய் அடைப்பு தென்னம்பாளையம் பள்ளி வீதியில் பல மாதங்களாக சாக்கடை கழிவு அகற்றப்படாமல், கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. - காயத்ரி, தென்னம்பாளையம். விபத்து அபாயம் தென்னம்பாளையத்தில் இருந்து ஏ.பி.டி., ரோடு செல்லும் பகுதியில் நடுரோட்டில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. விபத்து அபாயம் உள்ளது. - வாசுதேவன், திருப்பூர். தொங்கும் விளக்கு கொடுவாய் மகரிஷி நகரில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தெருவிளக்கு உடைந்து விழும் நிலையில் தொங்கிக்கொண்டுள்ளது. - தாமு, கொடுவாய். ரியாக் ஷன் குப்பை அகற்றம் வீரபாண்டி - கல்லாங்காடு ரோட்டில் தேக்கி வைக்கப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டி வைக்கப்பட்டது. - சிதம்பரகுமார், வீரபாண்டி. ரோடு சீரமைப்பு திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய ரோடு சீரமைக்கப்பட்டது. - வின்சென்ட் ராஜ், ராயபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி