மேலும் செய்திகள்
தெருவிளக்கு பொருத்துங்க...
30-Jun-2026
புகார் பெட்டி தொடர்ச்சி...
02-Jul-2026
தெருவிளக்கு எரியாது ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட்டில் இருந்து ஒற்றைக்கண் பாலம், அணைக்காடு வரை இரண்டு கி.மீ., துாரத்துக்கு, 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. - பட்டீஸ்வரன், சபாபதிபுரம். கம்பி தெரியுது திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு - கோல்டன்நகர் ரோடு ரயில் பாலத்தின் கீழ் கான்கீரிட் சாலை சேதமாகி கம்பி வெளியே தெரிகிறது. - விஜயலட்சுமி, கோல்டன்நகர். ஆக்கிரமிப்பால் ஆபத்து திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் சாலை குறுகலாக உள்ளது. போக்குவரத்து அதிகமாகிறது; அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். - சண்முகபிரணவ், பெரியாயிபாளையம். அபாயம் உள்ளது திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் ஆறாவது வீதி வளைவில் குழாய், கேபிள் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. வாகன ஓட்டிகளுக்கு அபாயம் உள்ளது. - தேவிபிரியா, செங்குந்தபுரம். குடிநீர் வீணாகுது அனுப்பர்பாளையம், திலகர் நகர் ஸ்டாப்பில் குடிநீர்வடிகால் வாரிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி நிறைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. - மணி, திலகர்நகர். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, சபாபதிபுரம், ரயில்வே மேம்பாலம் அருகே குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. - தம்புராஜ், சபாபதிபுரம். கழிவுநீர் பாயுது போயம்பாளையம், கணபதி நகர், அபிராமி தியேட்டர் வீதியில் முட்புதர் நிறைந்து இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது; கொசுத்தொல்லை அதிகமாகிறது. - சங்கர், போயம்பாளையம். தார்ரோடு எப்போது? கூலிபாளையத்தில் இருந்து நஞ்சராயன்நகர் செல்லும் சாலை தார்ரோடாக மாற்ற வேண்டும். மண் சாலையாக உள்ளது. - மீரான், நஞ்சராயன்நகர். சப்ளை தாமதமாகுது பெரிச்சிபாளையம், மாசாணியம்மன் கோவில் வீதியில், பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீருக்கு வழியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். - மணிகண்டன், பெரிச்சிபாளையம். கால்வாய் உடைந்தது மண்ணரை, கருப்பராயன் கோவில் பாதையில் பாதாள சாக்கடை கால்வாய் மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறுகிறது; துர்நாற்றம் வீசுகிறது. - துரைராஜ், மண்ணரை.
30-Jun-2026
02-Jul-2026