உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / குப்பை அள்ளுவதில் மெத்தனம்; சுகாதாரம் எப்படி சாத்தியம்?

குப்பை அள்ளுவதில் மெத்தனம்; சுகாதாரம் எப்படி சாத்தியம்?

குப்பை குவியல்திருப்பூர், 13வது வார்டு, லட்சுமி தியேட்டர் ரோட்டில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்களால் அள்ளப்படாததால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- வின்ரோஸ், காந்தநகர்திருப்பூர், 55வது வார்டு, பெரிச்சிபாளையம் முனியப்பன் கோவில் எதிரில் குப்பை தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது; குப்பையை அவ்வப்போது அகற்ற வேண்டும்.- சுப்ரமணியன், பெரிச்சிபாளையம்.திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் எதிரே மாநகராட்சி வணிக வளாகத்தில் தேங்கும் குப்பைகள் அள்ளப்படாததால், குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.- சத்தியன், ஜெய்வாபாய் பள்ளி வீதி.தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், 6வது வார்டு, அறிவொளி நகரில் உள்ள 10 தெருவிளக்குகள் ஒளிராததால், வீதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.- முருகேசன், அறிவொளிநகர். திருப்பூர், குமரன் ரோடு - கோர்ட் வீதியில் தெருவிளக்குகள் எரியாததால், புதிய விளக்குகளை மாற்றித்தர வேண்டும்.- கோகுலகிருஷ்ணா, குமரன் ரோடு. பிளக்ஸ் அகற்றுங்கதிருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு வளைவில், திரும்பும் வாகனங்கள் தெரியாத வகையில் 'பிளக்ஸ்' வைத்துள்ளனர். விபத்து ஏற்படும் முன் பிளக்ைஸ அகற்ற வேண்டும்.- லோகநாதன், அங்கேரிபாளையம். வீணாகும் தண்ணீர்திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறத்தில், அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கிறது; குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- முருகம்மாள், பஸ் ஸ்டாண்ட். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், மூகாம்பிகைநகர் மூன்றாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- மேகலா, மூகாம்பிகைநகர். ரோடு போடுங்கதிருப்பூர், 7வது வார்டு, குருவாயூரப்பன்நகர் வடக்கு, பூலுவப்பட்டி - ஏ.டி., காலனி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.- குமரேசன், குருவாயூரப்பன் நகர். தொட்டி வேண்டும்திருப்பூர், 24வது வார்டு, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் மெயின் ரோட்டில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை அள்ளுவதுடன், கூடுதலாக குப்பை தொட்டி வைக்க வேண்டும்.-- ரவிக்குமார், சாமுண்டிபுரம். திருப்பூர், 12வது வார்டு, 15 வேலம்பாளையம் - சிறுபூலுவப்பட்டி ரோட்டில் குப்பை தேங்கியுள்ளது; தொட்டி இல்லாததால், ரோட்டிலேயே குப்பை வீசியெறியப்படுகின்றனர்- ரங்கராஜ், 15 வேலம்பாளையம். அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், நிழற்குடை முன் மழை பெய்யும் போதெல்லாம், வழிந்தோட வழியில்லாமல் மழைநீர் தேங்குகிறது. மண் கொடடி சமன் செய்ய வேண்டும்.- சண்முகசுந்தரம், அவிநாசி. அகலப்படுத்த வேண்டும்திருப்பூர், புதுரோடு, டி.என்.கே., பள்ளி - நெசவாளர்காலனி, ஜி.என்., கார்டன் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றி, சாலையை விரிவாக்க வேண்டும்.- கிருஷ்ணா, புதுரோடு. ----ரியாக் ஷன்குப்பையை அள்ளிட்டாங்கதிருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி வீதியில் குப்பை, சமையல் கழிவுகள் நிறைந்து இருந்ததாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் குப்பை அகற்றப்பட்டு விட்டது.- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி